இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல ஷமி கைகொடுப்பார் - பிராட் ஹாக்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல ஷமி கைகொடுப்பார் - பிராட் ஹாக்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல ஷமி கைகொடுப்பார் - பிராட் ஹாக்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல ஷமி கைகொடுப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்தத் தொடர் இந்தியாவுக்கு மிகவும் சவால் நிறைந்த தொடராக இருக்கும் என முன்னாள் வீரர்கள் சொல்லி வருகின்றனர். 

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல ஷமி கைகொடுப்பார் எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக். 

“கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில், ஷமி பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும் இந்த முறை அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. நிச்சயமாக இந்தத் தொடரில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நினைக்கிறேன். அதன் மூலம் இந்தியா இந்தத் தொடரை வெல்லவும் அவர் கைக்கொடுப்பார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வீசியது போல அவர் சிறப்பாக பந்து வீசுவார்” என தனது யூடியூப் சேனலில் ஹாக் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com