5 டக் அவுட்: போல்ட் வேகத்தில் 58 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!

5 டக் அவுட்: போல்ட் வேகத்தில் 58 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!

5 டக் அவுட்: போல்ட் வேகத்தில் 58 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!
Published on

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 58 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுருண்டது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகள் பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டி, ஆக்லாந்தில் இன்று தொடங்கியது.   பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இதில் பிங்க் நிறப் பந்து பயன்படுத்தப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு போட்டித் தொடங்கியது. 

5 டக் அவுட்!

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இங்கிலாந்து கேப்டன் ரூட், ஆல் ரவுண்டர் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், மொயீன் அலி, பந்துவீச்சாளர் பிராட் ஆகிய ஐந்து வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். ஸ்டோன்மேன் 11 ரன்கள் எடுத்தார். 27 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த அந்த அணியை, கடைசி கட்டத்தில் ஓவர்டான் போராடி அடித்து கொஞ்சம் மூச்சு விட வைத்தார். அவர் 33 ரன்கள் எடுத்த நிலையில் 58 ரன்களுக்கு விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து அணி. போல்ட் அதிரடியாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சவுதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. 


சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி, இங்கிலாந்துடன் 18 டெஸ்ட் தொடர்களில் மோதி  ஒரே ஒரு தொடரை  மட்டுமே கைப்பற்றி இருக்கிறது. அந்த மோசமான வரலாற்றை மாற்றும் முனைப்புடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இது ஒரு புறமிருக்க, இங்கிலாந்து அணி, கடைசியாக விளையாடிய 11 வெளிநாட்டு டெஸ்ட்டுகளில் ஒன்றில் கூட வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த ஸ்கோர்

1955-ம் ஆண்டில், நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிராக இதே ஆக்லாந்தில் 26 ரன்களுக்கு சுருண்டது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோராக இதுதான் பதிவாகி இருக்கிறது. இதை முறியடிக்கும் வாய்ப்பு, நியூலாந்து அணிக்கு இன்று கிடைத்திருந்தது. ஆனால் சில கேட்ச் வாய்ப்புகளை அந்த அணி கோட்டை விட்டதால், இந்த வாய்ப்பு பறிபோனது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com