\
போராட்டத்திற்குப் பிறகு தனி நபராக ஓடித் தகுதி பெற்ற மக்வாலா!

போராட்டத்திற்குப் பிறகு தனி நபராக ஓடித் தகுதி பெற்ற மக்வாலா!

போராட்டத்திற்குப் பிறகு தனி நபராக ஓடித் தகுதி பெற்ற மக்வாலா!
Published on

உலகச் சாம்பியன்ஷிப் தடகளத்தில், போஸ்ட்வானாவைச் சேர்ந்த ஐசக் மக்வாலா , 200 மீட்டர் ஓட்டத்தில் தனிநபராக ஓடி, இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஐசக்மக்வாலா, கடந்த திங்களன்று நடந்த உலகச் சாம்பியன்ஷிப் தடகள போட்டியின் முதல் தகுதிச் சுற்றில் பங்கேற்கவில்லை. பின்னர் அவர் ‌உடல் தகுதி பெற்றதாக மருத்துவர்கள் சான்று அளித்தனர். இதனைத் தொடர்ந்து தனியாக தகுதிப் போட்டி நடத்தப்பட்டது. 

மக்வாலாவிற்கு மட்டும் தனியாக நடந்த அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற மக்வாலா, எட்டு பேர் பங்கேற்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். உடல்நலக் குறைவால் நேற்றுமுன்தினம் நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் இறுதிச்சுற்றில் மக்வாலா பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com