ஆஸி., ஓபன் டென்னிஸ்: வரலாறு படைத்த போபண்ணா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா இணை சாம்பியன் பட்டம் வென்றது.
ரோகன் போபண்ணா
ரோகன் போபண்ணாட்விட்டர்

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, இத்தாலியின் சைமன் பெலேலி - ஆன்ட்ரியா வாவாசோரி இணையை எதிர்கொண்டது.

இதில் 7-6, 7-5 என்ற கணக்கில் போபண்ணா இணை வென்றது. 43 வயதாகும் போபண்ணா அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்தார். இரட்டையர் பிரிவில் போபண்ணா முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஜனவரி 25-ஆம் தேதி நடைபெற்ற இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- சீனாவின் சாங் சீசென், செக் நாட்டின் தாமஸ் மெக்காக் ஜோடியை 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட்களில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com