\
என் போட்டோவை ஆபாசமாகப் பயன்படுத்துவதா? பாடிபில்டர் ஸ்வேதா புகார்

என் போட்டோவை ஆபாசமாகப் பயன்படுத்துவதா? பாடிபில்டர் ஸ்வேதா புகார்

என் போட்டோவை ஆபாசமாகப் பயன்படுத்துவதா? பாடிபில்டர் ஸ்வேதா புகார்
Published on

தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பயன்படுத்துவதாக, பாடிபில்டர் ஸ்வேதா ரத்தோர் போலீசில் புகார் தெரிவித்துள் ளார்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் ஸ்வேதா ரத்தோர். சர்வதேச பாடிபில்டர் போட்டியில் விருது பெற்ற ஒரே இந்திய பெண் இவர்தான். இவர் இப்போது மும்பை அருகிலுள்ள ஓஷிவாராவில் வசித்து வருகிறார். இவர் தான் எஸ்சர்சைஸ் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை முகப்புத்தக த்தில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் யாரோ ஒருவர், இவரது புகைப்படங்களை பதிவேற்றி வருவதாக தோழிகள் மூலம் தெரியவந்தது. ரசிகர்கள் யாராவது இப்படி செய்யலாம் என நினைத்து விட்டுவிட்டார். ஆனால் அடுத்தடுத்து தொடர்பு கொண்ட தோழிகள், அந் தப் புகைப்படங்கள் ஆபாசமான முறையில் வரையப்பட்டும் மோசமான கருத்துகளைப் பதிவிட்டும் வெளியாவதாக தெரிவித்தனர். இதை யடுத் து  அதைப் பார்த்த ஸ்வேதா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஓஷிவாரா போலீசில் புகார் செய்தார்.

’பெண்களை இதுபோன்று தவறாகச் சித்தரிப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதால் போலீசில் புகார் செய்தேன்’ என்றார் ஸ்வேதா.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com