சேப்பாக்கத்தில் இன்று பயிற்சிப் போட்டி: அனுமதி இலவசம்!
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் அணி இடையிலான பயிற்சி ஆட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்.
ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. முதல் போட்டி வரும் 17-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இன்று பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது. சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய வாரியத் தலைவர் அணி மோதுகிறது. இதில் வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிபாதி, சந்தீப் ஷர்மா, நிதிஷ் ராணா உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பயிற்சி ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம். சி, டி மற்றும் இ ஸ்டாண்டுகளின் கீழ் பகுதியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.