”பிசிசிஐ மீது பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது; பாகிஸ்தானை ஓரங்கட்டுகிறது” - ரமீஸ் ராஜா!

”பிசிசிஐ மீது பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது; பாகிஸ்தானை ஓரங்கட்டுகிறது” - ரமீஸ் ராஜா!
”பிசிசிஐ மீது பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது; பாகிஸ்தானை ஓரங்கட்டுகிறது” - ரமீஸ் ராஜா!

”இந்திய கிரிக்கெட் வாரியம் மீது ஆளும் பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

லாகூரில் உள்ள அரசுக் கல்லூரி பல்கலைக்கழக நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய ரமீஸ் ராஜா, "இந்தியாவில் மத்தியில் ஆளும் பாஜக கட்சி, பிசிசிஐ மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த ஆதிக்கம், பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒருபோதும் முன்னேறவிடாது. ஐசிசிக்கு அதிகப் பங்களிப்பை வழங்க இந்தியாவிடம் வளங்களும் பணமும் இருப்பதால், அது மெதுவாகவும் படிப்படியாகவும் முன்னேறி வரும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை கிட்டத்தட்ட ஓரங்கட்டுகிறது. பணம் மற்றும் அதிகாரம் மூலம் அழுத்தம் கொடுக்க நினைக்கும் கவுன்சிலுக்கு அடிபணிய வேண்டாம் என்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை தாம் கேட்டுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.

ரமீஸ் ராஜா இப்படிப் பேசியிருப்பது இந்திய அரசியலில் மட்டுமின்றி, விளையாட்டிலும் புயலைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து, அவ்வணி வாரியத் தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நஜம் சேத்தி தலைவராக உள்ளார். அதுபோல், பாகிஸ்தான் இடைக்கால தேர்வுக்குழுத் தலைவராக அப்ரிடி உள்ளார். 

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com