என் வாழ்நாளில் மிகப்பெரிய தோல்வி: தினேஷ் சண்டிமல்

என் வாழ்நாளில் மிகப்பெரிய தோல்வி: தினேஷ் சண்டிமல்
என் வாழ்நாளில் மிகப்பெரிய தோல்வி: தினேஷ் சண்டிமல்

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தது என் வாழ்நாளில் நான் சந்தித்திருக்கும் மிகப்பெரிய தோல்வி என்று இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமல் கூறியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்று கணக்கில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதையடுத்து பேசிய இலங்கை அணி கேப்டன் சண்டிமால், இந்திய அணியுடனான இந்த டெஸ்ட் தொடரில் 3-0 என்று தோல்வியடைந்தது வேதனை அளிக்கிறது. என் வாழ்நாளில் நான் சந்தித்திருக்கும் மிகப்பெரிய தோல்வி இது என்பதில் சந்தேகமில்லை. அதற்கு காரணம் எங்களால் ஒரு போட்டியில் கூட முழுமையாக 5 நாட்களும் ஆட முடியாமல் போனதுதான். இது எனக்கும் எனது அணியினருக்கும் மிக கடினமான ஒன்றாகும்.

நாங்கள் போட்டிக்கு முன்னர் கடுமையான பயிற்சியை மேற்கொண்டோம். இருந்தாலும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. நாங்கள் தோல்வியடைந்த போதும் ரசிகர்கள் எங்களை பாராட்டி ஊக்கமளித்தார்கள். ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு புதிய ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. இனி வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம் என்று தினேஷ் சண்டிமல் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com