ஷாஹீன் அப்ரிடி விலகலால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதி -வக்கார் யூனிஸ் சூசகம்

ஷாஹீன் அப்ரிடி விலகலால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதி -வக்கார் யூனிஸ் சூசகம்
ஷாஹீன் அப்ரிடி விலகலால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதி -வக்கார் யூனிஸ் சூசகம்

ஆசிய கோப்பை தொடரிலிருந்து ஷாஹீன் அஃப்ரிடி விலகியதால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள் எனக் கூறியுள்ளார் வக்கார் யூனிஸ்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் 28ஆம் தேதி லீக் சுற்றில் மோதுகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி ஆகியோரை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் ஷாஹீன் அஃப்ரிடி. இதனால் வரவிருக்கும் ஆசியக் கோப்பை தொடரிலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷாஹீன் அஃப்ரிடி மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விலகி இருப்பது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி விலகலால் இந்திய அணியின் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள் எனக் கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ். இதுகுறித்து அவர் வெளியிடிருக்கும் ட்விட்டர் பதிவில், ''ஆசியக் கோப்பை தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி விளையாடுவதை பார்க்க முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது. விரைவில் உடல் தகுதி பெறுங்கள் ஷாஹீன்'' என அவர் பதிவிட்டிருக்கிறார்.

ஷாஹீன் அஃப்ரிடியின் விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் ஷதாப் கான்,  "ஷாஹீன் எங்கள் அணியின் சிறந்த பந்துவீச்சாளர். அவர் ஆசிய கோப்பையில் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும் ஷாஹீன் இதற்கடுத்து வரும் தொடர்கள், டி20 உலகக் கோப்பையில் அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறோம்'' என கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது முழங்காலில் காயமடைந்த ஷாஹீன் அஃப்ரிடி, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் 5-6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால், ஆசியக் கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றிலிருந்து விலகியுள்ளார்.

இதையும் படிக்க: ஷர்துல் தாகூர் அபார பந்துவீச்சு! ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com