காத்திருப்பில் ஜாதவ்: அணிக்கு திரும்பியது இந்திய வேகங்கள்!

காத்திருப்பில் ஜாதவ்: அணிக்கு திரும்பியது இந்திய வேகங்கள்!

காத்திருப்பில் ஜாதவ்: அணிக்கு திரும்பியது இந்திய வேகங்கள்!
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடக்க இருக்கும் மீதமுள்ள 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி, நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஓய்வளிக்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது.

முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலி சில சாதனைகளை செய்தாலும் போட்டி, யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமனில் முடிந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள மூன்று போட்டிகள், முறையே புனே (நாளை), மும்பை (29ஆம் தேதி), திருவனந்தபுரம் (நவ.1) ஆகிய இடங்களில் நடக்கிறது.
கடைசி மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். 

முதல் இரு ஆட்டங்களில் ரன்களை வாரி வழங்கிய முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு தியோதர் கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடிய கேதர் ஜாதவ் அணியில் இடம்பெறவில்லை. மேலும் சில உள்ளூர் போட்டிகளில் விளையாடிய பிறகு அவர் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

அணி விவரம்: 
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், அம்பத்தி ராயுடு, ரிஷாப் பன்ட், தோனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், சேஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், கே.எல். ராகுல், மனிஷ் பாண்டே.

ஒரு நாள் தொடர் முடிந்த பின் நடக்கும் மூன்று டி 20 தொடர், ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க இருக்கும் 3 டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com