\
இணையத்தில் பரவும் புவனேஷ்வர் குமாரின் திருமண ஆல்பம்!

இணையத்தில் பரவும் புவனேஷ்வர் குமாரின் திருமண ஆல்பம்!

இணையத்தில் பரவும் புவனேஷ்வர் குமாரின் திருமண ஆல்பம்!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் - நுபுர் நாகர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.  

கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர்குமார் தனது தோழியான நுபுர் நாகரை நேற்று கரம்பிடித்தார். இவர்களின் திருமணம் புவனேஷ்வர் குமாரின் சொந்த ஊரான மீரட்டில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து இந்திய மற்றும் இலங்கை அணி கிரிக்கெட் வீரர்கள்,  கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கலந்துக் கொள்வதற்காக திருமண வரவேற்பானது நடைபெற உள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போன கிரிக்கெட் வீரர்கள் பலர், தங்களின் வாழ்த்துக்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் போன்றோர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் புவனேஷ்வர்குமார் - நுபுர் நாகர் ஜோடியின் திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிகம் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணைய பிரியர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தியா - இலங்கை இடையே நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் புவனேஷ்வர் குமார் பங்கேற்று இருந்தார். அதன் பின்பு திருமணம் காரணமாக அடுத்து வந்த இரண்டு போட்டிகளில் இருந்து அவர் விலகி கொண்டார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் இந்திய அணியின் சேர்க்கப்பட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com