விளையாட்டு
பென் ஸ்டோக்ஸ் போன்ற சிறந்த ஆல்ரவுண்டர்: பாண்ட்யாவை புகழ்ந்த கோலி
பென் ஸ்டோக்ஸ் போன்ற சிறந்த ஆல்ரவுண்டர்: பாண்ட்யாவை புகழ்ந்த கோலி
இங்கிலாந்து அணிக்காக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் எப்படி சிறப்பாக விளையாடுகிறரோ, அதே போன்ற ஆட்டத்தை இந்திய அணிக்காக ஹர்திக் பாண்ட்யா வெளிப்படுத்துவார் என கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோலி இதனை தெரிவித்தார். முதல் இன்னிங்ஸில் பந்துவீச பாண்ட்யாவுக்கு அதிக வாய்ப்பு கிட்டவில்லை என்றும், இரண்டாவது இன்னிங்ஸில் தமக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தினார் என்றும் கோலி கூறியுள்ளார். காலே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய பாண்ட்யா, 49 பந்துகளில் அரைசதமடித்தார்.