\
ஐஎஸ்எல் கால்பந்து:  பெங்களூரு அணிக்கு 3ஆவது வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து: பெங்களூரு அணிக்கு 3ஆவது வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து: பெங்களூரு அணிக்கு 3ஆவது வெற்றி
Published on

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பெங்களூரு எப்.சி. அணி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்றுப்போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன். கவுகாத்தியில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி. அணியும் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோதினர். விறுவிறுப்பு நிறைந்த இந்தப்போட்டியில்  பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது. பதில் கோல் அடிப்பதற்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டதால் நார்த் ஈஸ்ட் அணி தோல்வியைத் தழுவியது.இதுவரை  4 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 9 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com