\
அதிரடி அரைசதம் கடந்தார் பென் ஸ்டோக்ஸ்... திணறும் மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள்!

அதிரடி அரைசதம் கடந்தார் பென் ஸ்டோக்ஸ்... திணறும் மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள்!

அதிரடி அரைசதம் கடந்தார் பென் ஸ்டோக்ஸ்... திணறும் மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள்!
Published on

மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபுதாபி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஹர்த்திக் பாண்ட்யா அபாரமாக ஆடி 21 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்ஸ் 2 பவுண்டரி அடங்கும்.

இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது. 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களுடன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் அபாரமாக ஆடி 28 பந்துகளில் 53 ரன்கள் குவித்துள்ளார். 9 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com