இங்கி. நியூசி. ஒரு நாள் போட்டி: கிராண்ட்ஹோம் வேகத்தில் உடைந்தது ஸ்டோக்ஸ் பேட்!

இங்கி. நியூசி. ஒரு நாள் போட்டி: கிராண்ட்ஹோம் வேகத்தில் உடைந்தது ஸ்டோக்ஸ் பேட்!
இங்கி. நியூசி. ஒரு நாள் போட்டி: கிராண்ட்ஹோம் வேகத்தில் உடைந்தது ஸ்டோக்ஸ் பேட்!

நியூசிலாந்து வீரர் கிராண்ட் ஹோம் வீசிய பந்தை அடித்தபோது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பேட் உடைந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில் நியூசிலாந்தும்  இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிப்பெற்றன. இந்நிலையில் மூன்றாவது போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 234 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் மோர்கன் அதிகப்பட்சமாக 48 ரன்களும் ஸ்டோக்ஸ் 39 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளும் போல்ட் 2 விக்கெட்டுகளும் கிராண்ட்ஹோம், சவுதி தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். மூன்று பேர் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியின் போது, கிராண்ட்ஹோம் வீசிய பந்தை பென் ஸ்டோக்ஸ் வேகமாக அடித்தார். அப்போது அவரது பேட் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேட்டை மாற்றி அவர் விளையாடினார்.

பின்னர் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணியில் குப்திலும் முன்றோவும் களமிறங்கினர். வோக்ஸ் பந்தில் குப்தில் அவுட் ஆனார். அந்த அணி, 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com