\
உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பெல்ஜியம் தகுதி

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பெல்ஜியம் தகுதி

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பெல்ஜியம் தகுதி
Published on: 


ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு, ஆறாவது அணியாக பெல்ஜியம் தகுதி பெற்றுள்ளது.

ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்றில், ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ள பெல்ஜியம் அணி, நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கிரீஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 
இந்தப் பிரிவில் முதலிடத்தை உறுதி செய்த பெல்ஜியம் அணி உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு, பிரேசில், ஈரான், ஜப்பான், மெக்சிகோ மற்றும் போட்டியை நடத்தும் ரஷ்யா ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com