‘ரோகித் ஃபிட் தான்’ வீடியோ வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ்... உருகும் நெட்டிசன்கள்!
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோகித் ஷர்மாவுக்கு இடம் கிடைக்காத நிலையில் அவர் பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை அப்லோட் செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவின் பெயர் மூன்று விதமான கிரிக்கெட் பார்மெட்டுகளிலும் இடம் பெறவில்லை.
ஃபிட்னெஸ் காரணத்தினால் ரோகித் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று பிசிசிஐ ஆஸ்திரேலிய பயணத்திற்கான வீரர்களின் பெயரை அறிவித்தது.
அந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் ரோகித் ஷர்மா வலையில் தீவிரமாக கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானதோடு கேப்டன் கோலி மற்றும் பிசிசிஐ தேர்வு குழுவை கடுமையக விமர்சித்து வருகின்றனர்.
‘யாரை ஃபிட் இல்லை என சொல்கிறீர்கள்?’, ‘அரசியல் அழுத்தமே ரோகித் வெளியேற்றப்பட காரணம்’, ‘ஒரு சம்பியனுக்கு இழைக்கப்பட்ட அநீதி இது’ என சொல்லி வருகின்றனர்.