ப்ளே ஆஃப்பின் போது 'ப்ரொபோஸ்' செய்ய திட்டமிட்ட சாஹர்: பிளானை மாற்றிய தோனி

ப்ளே ஆஃப்பின் போது 'ப்ரொபோஸ்' செய்ய திட்டமிட்ட சாஹர்: பிளானை மாற்றிய தோனி

ப்ளே ஆஃப்பின் போது 'ப்ரொபோஸ்' செய்ய திட்டமிட்ட சாஹர்: பிளானை மாற்றிய தோனி
Published on
தீபக் சாஹர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று தீபக்கின் தந்தை தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று பஞ்சாப் அணியுடன் நடைபெற்றது. இதில் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இப்போட்டியில் சுவராஸ்யமான சம்பவம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், போட்டியின்போது தனது காதலை வெளிப்படுத்தும் விதமாகத் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்தார். அப்போது தோனியின் மனைவி சாக்சி மற்றும் உடனிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வாழ்த்து தெரிவித்தனர். இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் தனது நிச்சயதார்த்த நிகழ்வை உறுதி செய்தார் தீபக் சாஹர். சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீபக் சாஹருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், கேப்டன் தோனியின் அறிவுரைப்படியே தீபக் சாஹர், தனது காதலியிடம் முன்கூட்டியே 'ப்ரொபோஸ்' செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீபக் சாஹர், ப்ளே-ஆஃப் சுற்றின்போது தனது காதலியிடம் 'ப்ரொபோஸ்' செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தோனி, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னரே தீபக் சாஹரை அவரது காதலியிடம் 'ப்ரொபோஸ்' செய்யச் சொன்னதாகவும் அத்தகவல் தெரிவிக்கிறது. தீபக் சாஹர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று தீபக்கின் தந்தை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com