உலகக் கோப்பையில் மோதுமா இந்தியாவும் பாகிஸ்தானும் ? நாளை முக்கிய முடிவு

உலகக் கோப்பையில் மோதுமா இந்தியாவும் பாகிஸ்தானும் ? நாளை முக்கிய முடிவு
உலகக் கோப்பையில் மோதுமா இந்தியாவும் பாகிஸ்தானும் ? நாளை முக்கிய முடிவு

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் - இ -முகமது அமைப்பு ஈடுட்டது. இதையடுத்து அந்த நாட்டுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு போட்டிகளிலும் இந்தியா விளையாடக்கூடாது எனவும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐயின் நிர்வாக கமிட்டியின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விளையாட்டு துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகிய அமைச்சகங்களின் கருத்துகள் கேட்கப்படும். அத்துடன் பிசிசிஐ நிர்வாகம் பாகிஸ்தான் உடனான போட்டி குறித்து முடிவை எடுக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கோப்பையின் ரவுண்டு ராபின் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 16 ஆம் தேதி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உலகக் கோப்பை தொடரின் இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி கிரிக்இன்போவிற்கு அளித்த பேட்டியில், “இந்தப் போட்டி இங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. அந்த ஸ்டேடியத்தின் மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 25000 தான். ஆனால் எங்களுக்கு இதுவரை இந்தப் போட்டியை காண 4லட்சத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் வந்துள்ளது. இது ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான போட்டியை காண விருப்பம் தெரிவித்தவர்களை விட அதிகமான ஒன்று. மேலும் இவை அனைத்தும் உள்ளூர் ரசிகர்களின் விண்ணப்ப அளவுதான். இதற்கு அடுத்து உலக ரசிகர்களின் விண்ணப்பங்களும் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com