பிசிசிஐ செயலாளர் பதவி தேர்தல்|ஜனவரி 12ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கான செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்வு செய்யும் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐயின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுள்ளார். பொருளாளராக இருந்த ஆஷிஷ் ஷெலார் புதிய மகாராஷ்டிரா அரசில் அங்கம் வகிப்பதால் ராஜினாமா செய்திருந்தார். இந்த இரண்டு இடங்கள் காலியாக உள்ள நிலையில், இதனை நிரப்புதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இப்பதவிகளுக்கு தற்போது முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ள பிசிசிஐ, 27ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது. ஜனவரி 7ஆம் தேதி கடைசி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும், 12ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.