\
ரவி சாஸ்திரியின் சம்பளம் ரூ.8 கோடியாம்!

ரவி சாஸ்திரியின் சம்பளம் ரூ.8 கோடியாம்!

ரவி சாஸ்திரியின் சம்பளம் ரூ.8 கோடியாம்!
Published on: 

இந்திய கிரிக்‍கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்‍கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரிக்‍கு, ஆண்டுக்‍கு ரூ.8 கோடி வரை சம்பளம் கொடுக்‍க இந்திய கிரிக்‍கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

அனில் கும்ளே பதவி விலகலைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணிக்‍கு, ரவி சாஸ்திரியை தலைமைப் பயிற்சியாளராக கிரிக்‍கெட் வாரியம் அண்மையில் நியமித்தது. இந்நிலையில் ரவி சாஸ்திரியின் சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டுக்‍கு 8 கோடி ரூபாய் வரை அவருக்‍கு சம்பளம் வழங்குவது என்று பி.சி.சி.ஐ. ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ளேவுக்‍கு ரூ.6.5 கோடிதான் ஆண்டு சம்பளமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்‍கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com