\
“இந்திய அணிக்கு உதவ டிராவிடை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்பியாக வேண்டும்”-திலீப் வெங்சர்கார்

“இந்திய அணிக்கு உதவ டிராவிடை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்பியாக வேண்டும்”-திலீப் வெங்சர்கார்

“இந்திய அணிக்கு உதவ டிராவிடை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்பியாக வேண்டும்”-திலீப் வெங்சர்கார்
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய அணிக்கு உதவ ராகுல் டிராவிடை  உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தை (பிசிசிஐ) வலியுறுத்தியுள்ளார். 

“இந்திய அணி வீரர்களுக்கு உதவும் வகையில் பிசிசிஐ டிராவிடை ஆஸ்திரேலியாவுக்கு வெகு விரைவில் அனுப்ப வேண்டும். ஆஸ்திரேலிய சுழலில் நகர்ந்து  வரும் பந்தை எப்படி விளையாடுவது என்பது குறித்த புரிதலை பேட்ஸ்மேன்களுக்கு கொடுத்து, சிறப்பாக வழிநடத்த அவரால் மட்டுமே முடியும். அதோடு அவரது வருகை வலைபயிற்சியின்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்” என அவர் கூறினார்.

தற்போது டிராவிட் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com