\
இந்தியாவில் ஏன் ஐபிஎல் தொடரை நடத்தவில்லை? - ஜெய்ஷா விளக்கம்

இந்தியாவில் ஏன் ஐபிஎல் தொடரை நடத்தவில்லை? - ஜெய்ஷா விளக்கம்

இந்தியாவில் ஏன் ஐபிஎல் தொடரை நடத்தவில்லை? - ஜெய்ஷா விளக்கம்
Published on: 

இந்தியாவில் மழைக்காலம் என்பதால் ஐபிஎல் தொடரை இங்கு நடத்த முடியாத சூழலால் இடத்தை மாற்றினோம் என்று தெரிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.

இந்நிலையில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடத்த நேற்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகள் ஏன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்து ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார்.

அதில் "செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவில் பருவமழை காலம் ஆகும். அப்போது ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்துவது உகந்ததாக இருக்காது. இதன் காரணமாகத்தான் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடிவு செய்தோம்" என்றார் ஜெய் ஷா.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com