விளையாட்டு
ஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி!
ஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்திருப்பதால், இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியா வருகிறது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டி20 தொடரில் பங்கேற்க இருந்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்துள்ளதால், அந்த அணிக்கு பதிலாக இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியா வருகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.