இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் சுனில் ஜோஷி !

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் சுனில் ஜோஷி !

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் சுனில் ஜோஷி !
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக முன்னாள் இந்திய வீரர் சுனில் ஜோஷி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே.பிரசாத்தின் பதவிக் காலம் அண்மையில் முடிவடைந்தது. இதனையடுத்து எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான குழுவும் அண்மையில் கலைக்கப்பட்டது. இதனையடுத்து சுனில் ஜோஷி தலைமையிலான புதிய தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வுக் குழுவில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஹர்விந்தர் சிங், பரன்ஜாபே, சரண்தீப் சிங், தேவாங் காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சுனில் ஜோஷி இந்தியாவுக்காக 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். அவர் மொத்தம் 15 டெஸ்ட் போட்டிகள், 69 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்றுள்ளார். மொத்தமாக 110 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அதேபோல, பஞ்சப் மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஹர்விந்தர் சிங் இந்தியாவுக்காக மூன்று டெஸ்ட், 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1997 முதல் 2001 ஆம் ஆண்டுவரை இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய தேர்வுக் குழுவினர் மார்ச் 12 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்யவுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com