டிராவிட், கங்குலி குறித்து பகிரங்க கருத்து - சாஹாவிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு?

டிராவிட், கங்குலி குறித்து பகிரங்க கருத்து - சாஹாவிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு?
டிராவிட், கங்குலி குறித்து பகிரங்க கருத்து  - சாஹாவிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு?

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கான  பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் சாஹா 'பி' பட்டியலில் நீடிக்கின்றார். 'பி' பட்டியல் வீரர்கள் ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியம் பெறுவர்.

இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை சமீபத்தில்  அறிவித்திருந்தது இந்திய கிரிக்கெட் வாரியம். விராட் கோலிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கபட்டுள்ள நிலையில், இத்தொடரில் பல்வேறு சீனியர் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக விக்கெட் கீப்பிர் விருத்திமான் சாஹாவிற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியின் பிரதான கீப்பராக கடந்த சில ஆண்டுகளாக ரிஷப் பண்ட்டே செயல்பட்டு வரும் நிலையில் அவருக்கு பேக்-அப்பாக ஒவ்வொரு தொடரிலும் இடம்பெற்றுவிடுவார் சாஹா. ஆனால், இம்முறை அவருக்குப் பதில் கே.எஸ்.பரத் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

தான் அணியில் சேர்க்கப்படாதது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பிசிசிஐ தலைவர் கங்குலி ஆகியோர் தன்னிடம் பேசியது பற்றி சாஹா வெளிப்படையாகக் கூறியது விவாதப் பொருளானது. ராகுல் டிராவிட் தன்னிடம் ஓய்வு பற்றி சிந்திக்க வலியுறுத்தியதாகவும், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனக்கு அளித்த வாக்குறுதிப்படி நடக்கவில்லை என்றும் சஹா குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அவர், இனி அணியில் என்னை எடுக்க பரிந்துரைக்கப்படாது என தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறியதாகவும் பகிரங்கப்படுத்தினார்.

இவை அனைத்தையும் சாஹா பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் தன்னிடம் பேட்டி கொடுக்குமாறு வற்புறுத்தியதாகக் கூறிய சாஹா, அந்த பத்திரிகையாளர் அனுப்பிய குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘இந்திய கிரிக்கெட்டிற்கு இத்தனை வருடங்கள் பங்காற்றிய வீரரை பத்திரிகையாளர் நடத்தும் விதம் இதுதான்’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.  

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வீரர்களுக்கான ஒப்பந்த விதிமுறைப்படி, வீரர்கள் தேர்வு குறித்தோ, அலுவல்ரீதியான தகவல்கள் குறித்தோ பொதுவெளியில் வீரர்கள் கருத்துக்களை பகிரக்கூடாது. ஆனால் ராகுல் டிராவிட், சேத்தன் ஷர்மா, சவுரவ் கங்குலி ஆகியோர் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசியவற்றை சாஹா ஊடகங்களில் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டது விதிமீறல் எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாக சாஹாவிடம் பிசிசிஐ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கான  பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் சாஹா 'பி' பட்டியலில் நீடிக்கின்றார். 'பி' பட்டியல் வீரர்கள்  ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எப்போது தொடங்குகிறது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com