ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? தினேஷ் கார்த்திக்குக்கு பிசிசிஐ நோட்டீஸ்

ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? தினேஷ் கார்த்திக்குக்கு பிசிசிஐ நோட்டீஸ்
ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? தினேஷ் கார்த்திக்குக்கு பிசிசிஐ நோட்டீஸ்

கரீபியன் பிரீமியர் லீக்-கில் கலந்துகொண்ட தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் உள்ளூர் டி20 தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் டிரெஸ்சிங் ரூமில், இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லமுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவின. டிரின்பாகோ அணியின் ஜெர்ஸி அணிந்து அவர் இருப்பதால், இது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது. 

இந்திய வீரர்கள், வெளிநாட்டு டி20 தொடர்களில் ஆட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதியளிக்கவில்லை. யுவராஜ் சிங்குக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் தினேஷ் கார்த்திக் அங்கு ஏன் சென்றார் என்பது சர்ச்சையானது. இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் அனுமதி இன்றி அங்கு சென்றதால், உங்கள் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் தொடரில், தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக இருக்கிறார். இந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் தான், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com