ஐபிஎல் 2021  சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டம்?

ஐபிஎல் 2021 சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டம்?

ஐபிஎல் 2021 சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டம்?
Published on

2021 ஐபிஎல் சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்பதால், ஐபிஎல் அணிகளுக்கான முழுமையான ஏலம் நடத்த வாய்ப்புள்ளது.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் சவாலுடன் முடிந்த இந்த ஐபிஎல் சீசனுக்கு பிறகு, வரவிருக்கும் சீசனுக்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது பிசிசிஐ. இதனால் அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ஒரு முழுமையான ஏலத்தை நடத்தவும் வாய்ப்புள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்ட பின்னர், ஐபிஎல் போட்டிகளை மீண்டும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கான சாத்தியம் குறித்து  பிசிசிஐ ஆராய்ந்துவருகிறது.

2021 ஐபிஎல் சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்றும், அதனால் முழு ஏலம் நடத்த வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

பிசிசிஐ நிர்வாகம் பற்றிய அதிருப்திகளுக்கு மத்தியில் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடைபெற்றால், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. குஜராத்தின் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட  ஒரு அணி அடுத்த ஐபிஎல் சீசனில் இடம்பெறக்கூடும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com