ரூ.3500 கோடி வரி செலுத்திய கிரிக்கெட் வாரியம்!

ரூ.3500 கோடி வரி செலுத்திய கிரிக்கெட் வாரியம்!

ரூ.3500 கோடி வரி செலுத்திய கிரிக்கெட் வாரியம்!
Published on

இந்திய கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் போட்டியின் மூலம் கிடைத்த வருமானத்தில் ரூபாய் மூவாயிரத்து ஐநூறு கோடியை வருமான வரியாகக் கட்டியுள்ளது.

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இந்தியாவின் பிசிசிஐ திகழ்கிறது. ஐபிஎல் போட்டி ஆரம்பித்த பிறகு, பண மழை பெய்யத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் பிசிசிஐ-க்கு வருமான வரித்துறை வரிவிலக்கு அளித்து வந்தது. ஆனால், 2008-ல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்ட பிறகு வருமான வரித்துறை அதை மாற்றிக்கொண்டது.

ஐபிஎல் கமர்சியல் போட்டி என்பதால் கண்டிப்பாக வருமான வரி கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டது. இதையடுத்து 2008-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, 3,500 கோடி ரூபாயை வரியாகச் செலுத்தி உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை சுமார் ரூ.12 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com