
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால், நியூசிலாந்து அணிக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்த போது முழங்கை பகுதியில் பந்து தாக்கியதில் காயமடைந்தார். அது குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
மயங்க், 57 ரன்கள் எடுத்திருந்த போது நியூசிலாந்து வீரர் சவுதி வீசிய பந்து வலது முழங்கை பகுதியை பதம் பார்த்தது. அதன் காரணமாக வலியால் துடித்த அவர் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.
“காயம் அடைந்துள்ள மயங்க் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபீல்ட் செய்ய களம் இறங்கவில்லை. அதே போல நேற்றைய நாள் ஆட்டத்தில் ஃபீல்ட் செய்த போது ஏற்பட்ட காயம் காரணமாக கில், ஃபீல்ட் செய்ய களம் இறங்கவில்லை” என தெரிவித்துள்ளது பிசிசிஐ.