10 அணிகளுடன் வருகிறது 2022 ஐபிஎல்

10 அணிகளுடன் வருகிறது 2022 ஐபிஎல்
10 அணிகளுடன் வருகிறது 2022 ஐபிஎல்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் அகமதாபாத்தில் நடந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

ஐபில் கிரிக்கெட் போட்டிகளுக்கு கிடைக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு, ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் 8 அணிகளுடன் மேலும் இரண்டு அணிகளை சேர்ப்பதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது.

இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் அகமதாபாத்தில் நடந்த நிலையில், அதில் முக்கிய அம்சமாக இந்தக் கோரிக்கை கவனத்தில் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.

2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் இந்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த பிசிசிஐ ஆர்வம் காட்டினாலும், புதிய வீரர்களை போட்டிக்கு தயார்படுத்துவது, புதிய அணிகளை டெண்டர் மூலம் முடிவு செய்தல், வீரர்கள் ஏலம் ஆகியவற்றுக்கு போதிய கால அவகாசம் இல்லாததால் இந்த அணிகள் இணைப்பு என்பது 2022 ஆம் ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com