இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழுவுக்கு தகுதிப்பெற என்னனென்ன தகுதிகள்?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழுவுக்கு தகுதிப்பெற என்னனென்ன தகுதிகள்?
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழுவுக்கு தகுதிப்பெற என்னனென்ன தகுதிகள்?

சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவை பிசிசிஐ  கலைத்துள்ள நிலையில் புதிய தேர்வுக் குழுவில் இடம் பெற விரும்புவோர் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவி வெளியேறி இருந்தது இந்திய அணி. இதனால் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவை கூண்டோடு கலைத்துள்ளது பிசிசிஐ.

கடந்த அக்டோபர் மாதம் பிசிசியின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தின்போதே, “சேத்தன் சேர்மா தலைமையிலான தேர்வு குழு நீக்கப்பட்டு புதிய தேர்வு குழு நியமிக்கப்படும். அத்துடன் ஆலோசனை குழுவும் நியமிக்கப்படும்.” என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். “நியமிக்கப்படவிருக்கும் புதிய ஆலோசனை குழு, ஒவ்வொரு வருடமும் தேர்வு குழுவின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை கவனித்து அதைப்பற்றி பிசிசிஐக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டார் அதன்படி, இப்போது தேர்வுக்குழு கலைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு உருவாக்கப்பட்டது.  சுனில் ஜோஷி (தெற்கு மண்டலம்), ஹர்விந்தர் சிங் (மத்திய மண்டலம்) மற்றும் தேபாஷிஷ் மொஹந்தி (கிழக்கு மண்டலம்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவை கூண்டோடு கலைத்துள்ளது பிசிசிஐ. மேலும் தேர்வு குழுவுக்கு புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 28 ஆம் தேதி மாலை 6 மணி வரை காலக்கெடு என்றும் பிசிசிஐ தனது இணையதளத்தில் அறிவித்திருக்கிறது.

இதில் மொத்தம் 5 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது 30 முதல் தர போட்டிகள், அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் ஆடிய அனுபவம் இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோரின் பதவிக்காலம் 5 வருடங்கள் ஆகும்.

இதையும் படிக்கலாம்: ”சஞ்சு சாம்சன் எப்போதுமே அணிக்காக தயாராக இருக்கிறார்... ஆனால் அவரை”- முகமது கைஃப் வேதனை



Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com