தோனி தரத்தை குறைத்த பிசிசிஐ: பொங்கும் ரசிகர்கள்

தோனி தரத்தை குறைத்த பிசிசிஐ: பொங்கும் ரசிகர்கள்

தோனி தரத்தை குறைத்த பிசிசிஐ: பொங்கும் ரசிகர்கள்
Published on

இந்திய கிரிக்கெட் ஆணையம் வெளியிட்டுள்ள வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் தோனி்க்கு கிரேட்A அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை இன்று அறிவித்துள்ளது. கிரேட் A+,A,B,C என்ற தரநிலையில் வீரர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது. இதில் கிரேட் A+ வீரர்களுக்கு 7 கோடி, A - 5 கோடி, B -3 கோடி, C- 1 கோடியும் வழங்கப்படுகிறது. இதில் முன்னாள் கேப்டன் தோனி பின் தள்ளப்பட்டிருக்கிறார். தோனியை கிரேட் A-ல் வைத்துள்ளனர். இதன் காரணமாக தற்போது தோனியின் ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர். தோனிக்கு சம்பளம் எல்லாம் பெரிய விஷயமல்ல ஆனால் மூத்த வீரர் என்ற மரியாதை உள்ளது. இந்திய அணிக்கு தோனி ஆற்றிவரும் பங்கு அளப்பரியது. தொடர்ந்து அணியின் நலனுக்காவே அவர் விளையாடி வருகிறார். அவரது ஃபார்மிலும் எந்தக் குறையும் இல்லை. நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கீப்பிங்கிலும் தொடர்ந்து அசத்தி வருகிறார். இந்நிலையில் தோனியை கிரேட் A வீரராக பிசிசிஐ அறிவித்துள்ளது என அவரது ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

அப்படி தோனியை விட ஃபார்மில் அசத்தி வரும் எந்த வீரர்கள் கிரேட் A+ல் உள்ளனர். விராத், ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை விட தோனி எந்த விதத்தில் குறைந்து போயுள்ளார். களத்தில் 6வது மற்றும் 7வது பேட்ஸ்மேனாக களத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர் அப்படிப்பட்டவரை எப்படி கிரேட்Aல் இடம்பெறச்செய்யலாம் என ட்விட்டரில் பொங்கி வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com