“ஐபிஎல் தொடரில் ‘ட்ரீம் 11’ அதிகாரப்பூர்வ பங்குதாரர் தான்” - பிசிசிஐ அறிவிப்பு

“ஐபிஎல் தொடரில் ‘ட்ரீம் 11’ அதிகாரப்பூர்வ பங்குதாரர் தான்” - பிசிசிஐ அறிவிப்பு
“ஐபிஎல் தொடரில் ‘ட்ரீம் 11’ அதிகாரப்பூர்வ பங்குதாரர் தான்” - பிசிசிஐ அறிவிப்பு

2019 ஐபிஎல் கிரிக்கெட் டி20 தொடரில் ‘ட்ரீம் 11’ (Dream 11) நிறுவனம் அதிகாரப் பூர்வ பங்குதாரர் தான் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடர் இந்தியாவில் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரை பல தனியார் நிறுவனங்கள் பங்குதாரர்களாக இணைந்து நடத்துவார்கள். அந்த வகையில் ‘டீரிம் 11’ நிறுவனமும் ஒரு பங்குதாரர் தான் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அத்துடன் 4 வருட ஒப்பந்தமும் பிசிசிஐ செய்துள்ளது.

‘டீரிம் 11’ என்பது பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டாகும். ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது என்றால், அந்தப் போட்டியின் இரு அணிகளில் விளையாடும் 22 வீரர்களில் 11 பேரை தேர்வு செய்து ஒரு அணியை அமைக்க வேண்டும். அந்த அணியில் இடம்பெறும் வீரர்கள், நிஜப் போட்டியில் நன்றாக விளையாடினால், ‘ட்ரீம் 11’ அணியின் புள்ளிகள் உயரும். அதன்மூலம் அதிக புள்ளிகளை பெற்றவர்கள் ‘டீரிம் 11’ வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்கள். 

ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின் போதும், இந்தியாவில் லட்சக்கணக்கனோர் இதில் பணம் கட்டி விளையாடுகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியது. ஆனால் இதில் நீங்கள் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் வென்றால், அதில் 30% வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com