இங்கிலாந்துடனான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் 1 - 1 என இந்தத் தொடர் சமநிலையில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் வரும் 24-ஆம் தேதியன்று நடக்கவுள்ள இந்தத் தொடரின் முன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
அணி விவரம்…
கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோகித் ஷர்மா, மயங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா, பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அது தவிர நெட் பவுலர்களாக அங்கித் ராஜ்புட், ஆவேஷ் கான், சந்தீப் வாரியார், கிருஷ்ணப்ப கவுதம் மற்றும் சவுரப் குமார் இடம்பெற்றுள்ளனர். இரண்டு ஸ்டான்ட்பை பிளேயர்களாக கே.எஸ். பரத் மற்றும் ராகுல் சாஹர் இடம்பெற்றுள்ளனர்.