விளையாட்டு
கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் அனுபவ வீரர்களின்றி அசத்திய பார்சிலோனா
கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் அனுபவ வீரர்களின்றி அசத்திய பார்சிலோனா
கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் அனுபவ வீரர்கள் இல்லாதபோதும் அசத்தலான ஆட்டத்தை பார்சிலோனா அணி வெளிப்படுத்தியது.
கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடரில், நான்காவது சுற்றின் முதல் லெக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. மெஸ்சி, சுவாரஸ், இனிஸ்டா ஆகிய நட்சத்திர வீரர்கள் இன்றி, இளம் படையுடன் ரியல் முர்சியா அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி களமிறங்கியது. அனுபவ வீரர்கள் இல்லாதபோதும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணி, மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றியை வசமாக்கியது.

