வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ரஷித் கான், ஹஸ்மதுல்லா ஷஹிடியின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கான் அணி 255 ரன்கள் எடுத்துள்ளது.
ஆசியக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற ஆப்கான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 28 ரன்களில் 2 விக்கெட்களை இழந்த நிலையில் தொடக்கவீரர் முகமது ஷாஜத் - ஹஸ்மதுல்லா ஷஹிடி ஜோடி நிதானமாக விளையாடியது. ஆப்கான் 79 ரன்கள் எடுத்திருந்த போது 37 ரன்னில் ஷாஜத் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. இதனால், 160 ரன்னிற்குள் ஆப்கான் அணி 7 விக்கெட் இழந்தது.
இந்நிலையில் தான் குல்பதின் நாயிப் - ரஷித் கான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி 9 ஓவர்களை விக்கெட்களை இழக்காமல் இந்த ஜோடி நேர்த்தியாக விளையாடியது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. நாயிப் 42, ரஷித் கான் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசத்தின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் 4 விக்கெட் சாய்த்தார்.
நாயிப்-ரஷித் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஷித் 37 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார். இதனால், ரஷித் கானுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதிக அனுபவமில்லாத ஆப்கான் அணி தொடர்ச்சியாக 50 ஓவர்களை முழுமையாக விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கான் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி முதலில் விளையாடி 50 ஓவரில் 249 ரன்கள் எடுத்திருந்தது.