“ஜெயிக்குறோமோ, தோக்குறோமோ, சண்டை செய்யணும்” - பங்களாதேஷ் கற்றுதந்த பாடம்

“ஜெயிக்குறோமோ, தோக்குறோமோ, சண்டை செய்யணும்” - பங்களாதேஷ் கற்றுதந்த பாடம்

“ஜெயிக்குறோமோ, தோக்குறோமோ, சண்டை செய்யணும்” - பங்களாதேஷ் கற்றுதந்த பாடம்
Published on

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் மத்திய வரிசை வீரர்களான தோனி, கேதர் ஜாதவ் ஆகியோர் வெற்றிக்காக போராடவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்த ஜோடியின் அன்றைய ஆட்டம் பெரும்பாலான ரசிகர்களையும் கோபமடைய செய்தது. தோனியின் ரசிகர்கள் கூட அவரது பேட்டிங்கை பார்த்து விரக்தி அடைந்தனர். சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கடுமையான அதிருப்தியை கொட்டித் தீர்த்தனர்.

அதேபோல், ஆப்கான் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்த ஜோடியின் நிதான ஆட்டமும் விமர்சனத்திற்கு உள்ளானது. தோனி - கேதார் ஜோடி அடித்து ஆட வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் விளையாடினர் என்று வெளிப்படையாகவே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். தோனி - கேதர் ஜோடி சுழற்பந்துவீச்சாளர்களிடம் அதிக திணறுவதாக சேவாக் மறைமுகமாக சாடியிருந்தார்.

இன்றைய நிலையில்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் தோல்வி அடைந்த போதும் அந்த அணி இறுதிவரை வெற்றிக்காக போராடியது. ஷகிப் அல் ஹசன் உட்பட முக்கியமான 6 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்துவிட்ட போதும், வேகபந்து வீச்சாளர் சைஃபுதீன் கடையில் போராடி அரைசதம் அடித்தார். இந்திய அணிக்கு தோல்வி பயத்தை காட்டினார்.

அந்த அணி தோல்வியை தழுவிய போது அதனுடைய போராட்டக் குணம் இந்திய ரசிகர்களையும் கவர்ந்துவிட்டது. கேப்டன் விராட் கோலியும் போட்டி முடிந்த உடன் பங்களாதேஷ் அணியை பாராட்டினார். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் விளையாடியது சிறப்பாக இருந்ததாக கூறினார்.

நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி வீரர்கள் என்ன செய்தார்களோ அதனைதான் தோனி மற்றும் கேதாரிடம் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எந்தவொரு முனைப்புமே இல்லாமல் வெறும் சிங்கிள்களாக எடுத்ததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இங்கிலாந்து போட்டி நடந்த அதே மைதானத்தில்தான் நேற்றையப் போட்டியும் நடைபெற்றது. 

இந்தியா உடனான போட்டியில் மட்டுமல்ல ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட எல்லா அணிகளுடனான போட்டியிலும் பங்களாதேஷ் வீரர்கள் கடுமையாக போராடினர். சில போட்டிகளில் வெற்றி பெற்றனர். சில போட்டிகளில் போராடி தோல்வி அடைந்தனர். இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி அடைந்ததை பற்றி பெரிதாக விமர்சனம் இல்லை. ஏன் போராடவில்லை என்பதே தோனி - கேதர் மீதான விமர்சனம். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு பங்களாதேஷ் வீரர்களின் ஆட்டம் நல்ல உதாரணமாக அமைந்துவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com