'ஒயிட் வாஷ்' தோல்வி ! அதிர்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ்

'ஒயிட் வாஷ்' தோல்வி ! அதிர்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ்

'ஒயிட் வாஷ்' தோல்வி ! அதிர்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ்
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணி பங்களாதேஷில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த ஒயிட் வாஷ் தோல்வி காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் இரண்டாவது டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பங்களாதேஷ் அணி. சுழற்பந்து வீச்சாளர் மெஹ்தி ஹாசன் அபாரமாக பந்துவீசி இரு இன்னிங்ஸ்களிலும் 12 விக்கெட்டுகளை எடுத்தார்.
பங்களாதேஷின் சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தை வென்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் டாக்காவில் நடைபெற்றது. பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 508 ரன்களை குவித்தது. 

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாலோ ஆனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ச் இண்டீஸ் பொறுத்தவர் ஹெட்மயர் 92 பந்துகளில் 92 பந்துகளில் 93 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதர வீரர்கள் யாரும் 30 ரன்களை கூட அடிக்க முடியாமல் அவுட்டாகினர். 

சுழற்பந்து வீ்ச்சாளர் மெஹதி ஹசான் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்கிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரின் சுழற்பந்தில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். இறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை வென்றது. ஆட்டநாயகநாK மெஹதி ஹசானும், தொடர் நாயகனாக ஷகிப் அல் ஹசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com