பங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் !

பங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் !
பங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் !

இந்தியா - பங்களாதேஷ் இடையே இந்தூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் தனது இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளை வரை 4 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களை எடுத்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷம்தான் இஸ்லாம், இம்ருல் கயஸ் தலா 6 ரன்களில் அவுட்டானார்கள். இதற்கடுத்து ஆட வந்த மோனிமுல் ஹக், முகமது மிதுனும் விரைவாகவே ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பங்களாதேஷ் இப்போது தோல்வியை தவிர்க்க விளையாடி வருகிறது. பங்களாதேஷை தோல்வியில் இருந்து மீட்க ரஹீமும் மகமதுல்லாவும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com