நூறாவது டெஸ்டில் வெற்றியை வசப்படுத்திய பங்களாதேஷ்

நூறாவது டெஸ்டில் வெற்றியை வசப்படுத்திய பங்களாதேஷ்

நூறாவது டெஸ்டில் வெற்றியை வசப்படுத்திய பங்களாதேஷ்
Published on

பங்களாதேஷ் அணி தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை வசப்படுத்தியது.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை அணியுடான இரண்டாவது டெஸ்ட்டில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. முதல் இன்னிங்ஸில், இலங்கை 338 ரன்களும், பங்களாதேஷ் 467 ரன்களும் எடுத்தன. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு ‌ஆட்டமிழந்தது. 191 ரன்கள் என்ற வெற்றி இலக்கை கடைசி நாளான இன்று 6 விக்கெட்டுகளை இழந்து பங்களாதேஷ் அணி எட்டியது. தொடக்க வீரர் தமீம் இக்பால் 82 ரன்களும், சபீர் ரஹ்மான் 41 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி முதன்முறையாக வெற்றி கண்டுள்ளது. 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில்‌ முடிவடைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com