ஐபிஎல் 2021: ஒரே சீசனில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்ஷல் படேல் புதிய சாதனை

ஐபிஎல் 2021: ஒரே சீசனில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்ஷல் படேல் புதிய சாதனை
ஐபிஎல் 2021: ஒரே சீசனில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்ஷல் படேல் புதிய சாதனை
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற புதிய சாதனையை பெங்களூரு அணியின் ஹர்ஷல் படேல் படைத்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்ஷல் இச்சாதனையை வசமாக்கினார். இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் நடப்பு சீசனில் இதுவரை 29 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் பும்ரா 27 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இந்திய வீரர் படைத்த சாதனையாக இருந்தது. இந்நிலையில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஹர்ஷல் படேல் இந்த புதிய சாதனையை வசமாக்கியுள்ளார். லீக் சுற்றில் ஒரு போட்டியும், பிளே ஆஃப் சுற்றும் எஞ்சியுள்ள நிலையில் ஹர்ஷல் மேலும் சில விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com