பெங்களூர் அணியின் பலவீனமே இதுதான்..! மனம் திறந்த கோலி

பெங்களூர் அணியின் பலவீனமே இதுதான்..! மனம் திறந்த கோலி

பெங்களூர் அணியின் பலவீனமே இதுதான்..! மனம் திறந்த கோலி
Published on

ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அழுத்தமே பெங்களூர் அணியின் பலவீனம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் நேரடியாகக் கலந்துரையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நேரலையாக வந்த கோலி இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தார்.

அப்போது ஆரிசிபி அணி கோப்பையை வெல்ல முடியாதது குறித்துப் பேசிய கோலி "ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடங்கும் போதும். இந்தாண்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் களமிறங்குவோம். அந்த எண்ணம்தான் நாங்கள் கோப்பையை வெல்ல முடியாததற்குக் காரணமும் கூட. முதலில் கோப்பையை வெல்லும் எண்ணத்தை விட்டுவிட்டு ஓர் அணியாக மகிழ்ச்சியாக விளையாட வேண்டும்" என்றார்.

மேலும், தொடர்ந்த கோலி "ஆர்சிபி அணியில் நான், ஏபிடி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் ஆகியோர் சிறப்பாகவே விளையாடியுள்ளோம். ஐபிஎல் தொடரில் மூன்று முறை இறுதியாட்டத்துக்கு முன்னேறி இருக்கிறோம். ஆனால், ஐபிஎல் கோப்பையை வெல்லாத வரை இதெல்லாம் பெருமையல்ல. நாங்கள் சிறந்த அணிதான். கோப்பையை வெல்லும் தகுதி எங்களுக்கு இருக்கிறது. அது விரைவில் நடக்கும்" என்றார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்தாண்டு மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகத் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளை திட்டமிட்டப்படி நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com