ஆல்ரவுண்டராக அசத்திய ரஷித் கான் - திணறிய பங்களாதேஷ்

ஆல்ரவுண்டராக அசத்திய ரஷித் கான் - திணறிய பங்களாதேஷ்
ஆல்ரவுண்டராக அசத்திய ரஷித் கான் - திணறிய பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கேப்டன் ரஷித் கான் அசத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் சென்று, ஒரு டெஸ்ட் மற்றும் முத்தரப்பு டி-20 தொடரில் பங்கேற்கிறது. இந்த இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் சேர்த்து இருந்தது. அஸ்கார் ஆப்கன் 88 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் அப்சர் ஸ்ஜாய் 35 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ரஹ்மத் ஷா 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இரண்டாவது நாளான இன்று அஸ்கார் ஆப்கன் 92 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை நழுவவிட்டார். பின்னர், 8ஆவது வீரராக களமிறங்கிய கேப்டன் ரஷித் கான் அதிரடியாக விளையாடினார். டெஸ்ட் போட்டியைப் போல் அல்லாமல் ஒருநாள் போட்டியில் விளையாடுவது போல் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். ஆனால், மற்றவர்கள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அப்சர் ஸ்ஜாய் 41, குயஸ் அகமது 9, யமின் அஹ்மட்ஸாய் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், ரஷித் கான் 50 பந்துகளில் அரைசதம் அடித்தார். 51 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் விளாசினார். ஆப்கான் அணி 342 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதனையடுத்து, பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. அந்த அணியில் தொடக்க வீரர் ஷட்மன் இஸ்லாம் டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் சவுமியா சர்கார் 17 ரன்னில் நடையைக் கட்டினார். அதனையடுத்து, லிடன் தாஸ் மற்றும் மோமியுல் ஹாகியு ஆகியோரு ஜோடி சேர்ந்து ரன்கள் சேர்த்தனர். தாஸ் 33 ரன்களிலும், ஹக்யு 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 11 ரன்னில் அவுட் ஆனார். விக்கெட் கீப்பர் முஸ்பிகூர் ரஹிம் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மஹ்முதுல்லா 7 ரன்னில் ஆட்டமிழந்தார். மோசடிக் ஹோசைன் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். இரண்டாம் நாள் முடிவில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. ஹோசைன் 44, தைஜுல் இஸ்லா 14 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

ஆப்கான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட் சாய்த்தார். நபி 2 விக்கெட் எடுத்தார். கேப்டன் ரஷித் கான் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்ததோடு, 4 விக்கெட்டையும் சாய்த்து ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com