இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ரவீந்திர ஜடேஜாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிவடைந்த கொழும்பு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஜடேஜா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உறுதுணையாக இருந்தார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
போட்டியின்போது ஜடேஜா நடத்தை விதிமுறைகளை மீறியதால் போட்டிக்காக வழங்கப்படும் ஊதியத்தில் ஐம்பது சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், கடந்த 2 ஆண்டுகளில் 6 தரமதிப்பிழப்பு புள்ளிகளை பெற்ற அவருக்கு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.