ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. 47 -வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். அப்போது களத்தில் புவனேஷ்குமாரும் ஹர்திக் பாண்ட்யாவும் இருந்தனர். பந்தை எதிர்கொண்ட புவனேஷ்குமார் நேராக விளாச, வேகமாக சென்ற பந்து எதிரில் நின்ற பாண்ட்யாவின் ஹெல்மெட்டை பதம்பார்த்தது. இதில் நிலைகுலைந்த பாண்ட்யா சரிந்து விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்திரேலிய வீரர்கள் அவருக்கு உதவ ஓடி வந்தனர். ஆனால், சிறிது நேரத்தில் எழுந்து நின்ற பாண்ட்யா சகஜ நிலைக்குத் திரும்பினார்.