\
எனக்கு குட் ஃபிரைடே, ஆனா டீமுக்கு..! பரிதாப பத்ரி

எனக்கு குட் ஃபிரைடே, ஆனா டீமுக்கு..! பரிதாப பத்ரி

எனக்கு குட் ஃபிரைடே, ஆனா டீமுக்கு..! பரிதாப பத்ரி
Published on: 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் நேற்று மோதின.

‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியின் சாமுவேல் பத்ரி ஹாட்ரிக் சாதனை படைத்தும் பலன் இல்லாமல் போய்விட்டது.

இதுபற்றி பத்ரி கூறும்போது, ‘இந்த வெள்ளிக்கிழமை எனக்கு குட் பிரைடேவாக அமைந்தது. ஆனால் அணிக்கு அப்படி அமையவில்லை. பொல்லார்ட் எங்கள் வெற்றியை பறித்துவிட்டார்’ என்றார் பத்ரி

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com