அடுத்தடுத்து அசத்தல் கேட்ச்.. மும்பை இந்தியன்ஸை அதிர வைத்த டுபிளசிஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
பவர் பிளேயிலேயே மும்பை அணியின் ரோகித் மற்றும் டிகாக் என இரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தினர் பியூஷ் சாவ்லாவும், சாம் கர்ரனும்.
அதன் பின்னர் களம் இறங்கிய சூர்யகுமார் யாதவும், சவுரப் திவாரியும். இதில் சவுரப் மெல்லமாக ஆட்டத்தை மும்பையின் பக்கமாக திருப்பிக் கொண்டிருந்தார். மறுமுனையில் சூர்யகுமார் அவுட்டாக ஹர்திக் பாண்டியா இறங்கினார்.
14 ஓவர்களில் 121 ரன்களை குவித்து வலுவான நிலையில்இருந்தது மும்பை. ஜடேஜா வீசிய பந்தை சிக்ஸ் அடிக்க முயன்றார் சவுரப் திவாரி. டீப் லாங் ஆன் திசையில் பீல்டராக கொண்டிருந்த டுபிளசிஸ் சிக்ஸராக வேண்டிய பந்தை லாவகமாக பிடித்தார்.
முதல் முயற்சியிலேயே பந்தை பிடித்திருந்தாலும் பவுண்டரி லைனில் பேலன்சை டுபிளசிஸ் இழந்ததால் பந்த தூக்கி போட்டு இரண்டாவது முயற்சியில் பிடித்தார்.
அதே ஓவரின் நான்காவது பந்தில் பாண்ட்யா பறக்கவிட்ட பந்தை மீண்டும் கேட்ச் பிடித்து மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸின் பேஸ்மெண்டை வீக்கெட் செய்தார் டுபிளசிஸ்.
தொடர்ந்து ஆட்டத்தின் 18வது ஓவரிலும் லட்டு போல கைக்கு வந்த பந்தை பிடித்து அத்தினார் டுபிளசிஸ். CATCHES WIN MATCHES என கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்வது உண்டு. சென்னைக்கு டுபிளசிஸ் பிடித்த கேட்ச் கைகொடுக்கிறதா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுத்துள்ளது.