'நான் நம்பர் ஒன் வீரரா?' - தினேஷ் கார்த்திக் பாராட்டுக்கு பாபர் அசாம் பதில்

'நான் நம்பர் ஒன் வீரரா?' - தினேஷ் கார்த்திக் பாராட்டுக்கு பாபர் அசாம் பதில்
'நான் நம்பர் ஒன் வீரரா?' - தினேஷ் கார்த்திக் பாராட்டுக்கு பாபர் அசாம் பதில்

''3 வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் 1 ஆக இருப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று'' எனத் தெரிவித்துள்ளார் பாபர் அசாம்.  

ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி அணியில் ஜொலித்த தினேஷ் கார்த்திக், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைகின்றார். இந்த நிலையில், அண்மையில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டி ஒன்றில், உலகின் தலைசிறந்த நம்பர் ஒன் வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வருவார் என்றும் இதே போன்ற ஃபார்மில் ரன்களை குவித்தால் நிச்சயம் 3 வடிவ கிரிக்கெட்டிலும் உலகின் நம்பர் 1 வீரர் என்ற பெருமையை பாபர் பெறுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் கருத்து குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஒரு பேட்ஸ்மேனாக நம்பர் 1 ஆக வேண்டும் என்பது அனைவருக்கும் கனவாக இருக்கும். கடின உழைப்பால் 1 அல்லது 2 வடிவ கிரிக்கெட்டில் நம்பர் 1 ஆக இருக்கலாம். ஆனால் 3 வடிவ கிரிக்கெட்டிலும் இருப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று. ஃபிட்னஸை பெரிதும் பார்க்க வேண்டும். கூடுதல் ஃபிடனஸ் உடன் இருக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்து போட்டிகள் இருந்துக்கொண்டே இருக்கிறது. அதற்காக கூடுதலாக தயாராகி வருகிறேன். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக இருந்துவிட்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது'' என பாபர் அசாம் கூறினார்.

ஐசிசி பட்டியல் ஐசிசி பட்டியல் தற்போதைக்கு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 வீரராக பாபர் அசாம் இருந்து வருகிறார். விராட் கோலி 2வது இடத்தில் இருந்து வருகிறார். டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் பாபர் அசாம் 5வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: கோலாகலமாக நடந்த தீபக் சாஹர் - ஜெயா திருமணம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com