சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான அசார் அலி மற்றும் ஃபகர் ஜமன் ஆகியோர் புதிய சாதனை படைத்தனர்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இந்திய அணிக்கெதிரான போட்டியில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் குவித்து ஆடிவருகிறது. ஐசிசி நடத்தும் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு சேர்த்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பாக கடந்த 1996ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அமீர் சோஹைல் மற்றும் சயீத் அன்வர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்ந்திருந்ததே அதிகபட்சமாகும். சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி, பீல்டிங் தேர்வு செய்தார்.